
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பணம் உங்களது வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம். அதன்படி இந்தியன் பேங்க் வாடிக்கையாளர்கள் 092895 92895 என்ற எண்ணுக்கும் ஐசிஐசிஐ வாடிக்கையாளர்கள் 022 30256767 என்ற எண்ணுக்கும் கனரா வங்கி வாடிக்கையாளர்கள் 022 30256767 என்ற எண்ணுக்கும் hdfc வங்கி வாடிக்கையாளர்கள் 1800-270-3333 என்ற எண்ணுக்கும் ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் 1800-419-5959 என்ற எண்ணுக்கும் மிஸ்டு கால் கொடுத்தால் பேலன்ஸ் குறுஞ்செய்தி மூலமாக செல்போன் எண்ணுக்கு வந்து விடும். அதனைப் போலவே மற்ற வங்கியின் எண்களை பயன்படுத்தி தங்கள் வங்கிக் கணக்கில் பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.