
ஆந்திர மாநிலத்தில் உள்ள மதனப்பள்ளி கிராமத்தில் மூலா கங்குலமா என்ற 75 வயது மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி உள்ளூர் திருவிழாக்களில் வளையல்கள் மற்றும் பொம்மைகளை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்த மூதாட்டி சமீபத்தில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த நிலையில் அவரை அக்கா மகன் மருத்துவமனையில் அனுமதித்தார்.
அதன்படி வெங்கட்ரமணா ரெட்டி என்பவர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சைக்கு 2 லட்ச ரூபாய் வரையில் பணம் தேவைப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் கங்குலம்மா 2 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு ஒரு ஆட்டோவில் சென்றார். அந்த ஆட்டோக்காரர் 15 ரூபாய் கேட்ட நிலையில் மூதாட்டி 20 ரூபாய் கொடுத்துள்ளார்.
அவர் மீது 5 ரூபாயை கொடுக்காததால் கோபத்தில் மூதாட்டி அவரை திட்டியுள்ளார். அதோடு மீதி பணத்தை தரும் வரை ஆட்டோவை விட்டு இறங்க மாட்டேன் என்று மூதாட்டி பிடிவாதமாக கூறியுள்ளார். இதனால் அந்த ஆட்டோ ஓட்டுனர் விஷ்ணுவர்தன் கோபத்தில் ஒரு பள்ளியின் அருகே மூதாட்டியை அழைத்துச் சென்று அடித்து கொன்றார்.
இதைத் தொடர்ந்து மூதாட்டியின் உடலை சாலையில் வீசிய அவர் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்து விட்டதாக நாடகம் ஆடிய நிலையில் போலீசாரின் விசாரணையில் அனைத்து உண்மைகளும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதற்கிடையில் மூதாட்டி வைத்திருந்த 2 லட்ச ரூபாய் பணத்தை காணவில்லை. மேலும் அது தொடர்பாகவும் விசாரணை நடைபெறுகிறது.