
கரூர் மாவட்டத்தில் போதை மாத்திரைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர். காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கரூர் மாநகர டிஎஸ்பி செல்வராஜ் தலைமையில் தனிப்படை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனைகளை மேற்கொண்டது.
சோதனையின் போது ஆண்டாங்கோவில் புதூர் பகுதியை சேர்ந்த எடில் ரெமிங்டன், வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த மலர் எனும் மலர்க்கொடி, காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த கிஷோர்குமார் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். அந்த கும்பல், ஒரு மாத்திரையை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை விற்பனை செய்தது அம்பலமாகியுள்ளது. இவை பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.