தமிழக சட்டசபையில் கள்ளச்சாராய குற்றங்களை கடுமையாக்குவதற்கான சட்ட திருத்தம் நேற்று கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் அதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2023 ஆம் ஆண்டு கள்ளச்சாராயம் குடித்ததில் 23 பேர் பலியாக காரணமாக இருந்த கள்ளச்சாராய வியாபாரி மரூர் ராஜாவுக்கு மிக நெருக்கமாக இருந்தவர் அமைச்சர் செஞ்சி மஸ்தான். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

. இதேபோன்று தற்போது கள்ளச்சாராயம் குடித்ததில் 65 பேர் உயிரிழந்த நிலையில் அமைச்சர் முத்துசாமி மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போதைப்பொருள் கடத்தல் தலைவன் ஜாபர் சாதிக் திமுக தலைவர்கள் அனைவருக்கும் நெருக்கமானவர். அவருக்கு திமுகவில் உயர் பதவி கொடுத்ததோடு அவர் 2000 கோடி சம்பாதிக்கும் வரை வேடிக்கை பார்த்துள்ளனர். மேலும் இத்தனையும் செய்துவிட்டு தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937 இல் கடுமையாக இல்லை எனக்கூறி திருத்த மசோதா சட்டம் கொண்டு வருகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் கூறுவது இந்த ஆண்டின் ஆகச்சிறந்த நகைச்சுவை என்று விமர்சித்துள்ளார்.