அமெரிக்காவின் நார்த் டகோட்டா மாநிலத்தைச் சேர்ந்த இனா (Ina Thea Kenoyer) என்ற 48 வயது பெண், பேராசையால் தனது 10 ஆண்டுகள் காதலனான ஸ்டீவனை (Steven Edward Riley Jr) கொன்ற சம்பவம் சோகமாக முடிந்துள்ளது. இனா தனது காதலனுக்கு 30 மில்லியன் டொலர்கள் (ஈராயிரத்து எண்பது கோடி ரூபாய்) சொத்து கிடைக்கும் என்ற ஒரு போலி மின்னஞ்சலை நம்பி, அந்த பணத்தை தனக்கு முற்றிலும் சொந்தமாக்கிக்கொள்ள துடித்தார்.

ஸ்டீவனுக்கு ஒரு நாள் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அதிக வெப்பம் காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆனால் இனா உடனடியாக மருத்துவ உதவியை அழைக்காமல் இருந்துள்ளார். இதனால் ஸ்டீபன் உயிரிழந்ததாக கூறப்பட்டது. அளவுக்கு அதிகமாக குடித்ததால் ஹீட் ஸ்ட்ரோக் பிரச்சனை ஏற்பட்டதாக இனா கூறியிருந்தார். ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் ஒரு சொட்டு கூட மதுபானம் இல்லை என்பது தெரியவந்தது.

மாறாக அவரது ரத்தத்தில் நச்சு பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் போலீசார் இனாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது 30 மில்லியன் பவுண்ட் சொத்து கிடைக்கும் என்ற ஆசையில் தனது காதலனை விஷம் வைத்து கொன்றதாக இனா ஒப்புக்கொண்டார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கொலை செய்யப்பட்ட ஸ்டீபன் குடும்பத்தினருக்கு 345 டாலர்கள் இழப்பீடு செலுத்த வேண்டும் என இனாவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.