புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வந்த நல்லதம்பி என்பவர், ஒரு வாகன உரிமையாளரிடம் ஆயுள் வரி செலுத்துவதற்காக ரூ.3 லட்சம் பெற்றுக் கொண்டு, “நான் செலுத்திவிடுகிறேன்” என்று கூறி அவரை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தொகையை அவர் அரசுக்கு செலுத்தவில்லை என்பது தெரியவந்தது.  இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இத்னாஹ் நிலையில், சென்னை வட்டார போக்குவரத்துத் துறை ஆணையரின் உத்தரவுப்படி, மோட்டார் வாகன ஆய்வாளர் நல்லதம்பி நேற்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.