
மும்பையில் 30 ரூபாய்க்காக நண்பரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் ஆட்டோ கட்டணத்தை யார் செலுத்துவது என்ற சண்டையில் நம்பரை கொலை செய்த சாயிப் அலி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் இவரும் அவருடைய நண்பர் சக்கணும் மது அருந்துவதற்காக ஆட்டோவில் சென்று உள்ளனர்.
அப்போது ஆட்டோ கட்டணம் 30 ரூபாயை யார் செலுத்துவது என்று சண்டை நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில் சாயிஃப் அலி தனது நண்பனை கீழே தள்ளியபோது அவர் கீழே விழுந்து தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து கொலையாளியை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.