சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தினக்கூலியை 300 ரூபாயிலிருந்து 325 ரூபாயாக உயர்த்துவது என சென்னை மாநகராட்சி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் உயர்த்தப்பட்ட ஊதியத்தை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில் மலிவு விலையில் இட்லி, சப்பாத்தி, சாம்பார் சாதம் மற்றும் தயிர் சாதம் என உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியிலும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் இந்த திட்டத்திற்கு சரியாக நிதி ஒதுக்கப்படுவதில்லை என்றும் திட்டத்தை முடக்க திமுக அரசு முயற்சித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.