
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் பகுதியில் 300 கோடி ரூபாய் சொத்தை அபகரிப்பதற்காக மருமகள் ஒருவர் தனது மாமனாரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 22 ஆம் தேதி மானேவாடா பகுதியில் புருஷோத்தம்(82) கார் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கிய போது, இறந்தவரின் மருமகள் அர்ச்சனா பணம் கொடுத்து ஆட்களை ஏற்பாடு செய்து கார் விபத்தை ஏற்படுத்தி மாமனாரை கொன்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் அர்ச்சனாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.