மராட்டிய மாநிலம் நாக்பூர் பகுதியில் புருஷோத்தம் (82) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் 22ஆம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து  விசாரணை நடத்திய போது அவரை காரை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது கொலையாளி பிடிபட்டுள்ளார். அதாவது அவருக்கு பாக்டே என்ற மகன் இருக்கிறார். இவருடைய மனைவி அர்ச்சனா (53). இவர் நகர திட்டமிடல் துறை உதவி இயக்குனராக இருக்கிறார்.

இந்நிலையில் உயிரிழந்த புருஷோத்தம் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வைத்துள்ளார். இந்த சொத்துக்களை அபகரிக்க அர்ச்சனா திட்டமிட்டுள்ளார். இதனால் தன்னுடைய கணவரின் கார் ஓட்டுநர் மற்றும் கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து மாமனாரை தீர்த்துக்கட்ட அவர் முடிவு செய்துள்ளார். அதன்படி அவர்கள் கடந்த மாதம் 22ஆம் தேதி புருஷோத்தமை காரை ஏற்றிக் கொன்றனர். இந்த வழக்கில் தற்போது அர்ச்சனாவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஓட்டுனர் உட்பட 3 வேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.