
உலகம் முழுவதும் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த தொலைத்தொடர்பு நிறுவனம் ஏர்செல். இதைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. இதன் நிறுவனர் ஆனந்த கிருஷ்ணன் ஆவார். இவருக்கு ரூ.40,000 கோடி வரை சொத்து இருக்கிறது. இவர் தற்போது மலேசியாவில் வசிக்கும் நிலையில் 86 வயது ஆகிறது. இந்த வயதிலும் வர்த்தகத்தில் ஈடுபட்டு மிகவும் வெற்றிகரமாக அதில் திகழ்ந்து வருகிறார். இவருக்கு சிரிபான்யோ என்ற மகன் இருக்கிறார். இவர் புத்த மதத்தின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக சைவ துறவியாக மாறியுள்ளார்.
அதாவது புத்த மதத்தின் மீது தனக்கு இருந்த அதீத பற்றின் காரணமாக துறவரத்தை தேர்ந்தெடுத்து ஒரு துறவியாக மாறியதோடு யாசகம் கேட்டு மிக எளிமையான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இவர் தன்னுடைய 18 வயதில் துறவியாக மாறிய நிலையில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக துறவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது தாய்லாந்து நாட்டில் வசித்து வரும் நிலையில் தாவோ புத்த மதத்தின் மடாதிபதியாக இருக்கிறார். மேலும் பல கோடி ரூபாய்க்கு அதிபதியான சிரிபான்யோ துறவியாக மாறியது பலரது மத்தியிலும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.