இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் ola எலக்ட்ரிக் நிறுவனமானது முன்னிலையில் இருக்கிறது. இந்த நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மாடல்கள் குறைந்த விலையில் விற்பனை செய்கிறது. இந்த நிலையில் ஓலா நிறுவன ஸ்கூட்டர் மாடல்களுக்கு மே மாதம் சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஓலா எக்ஸ் மாடல் 74 ஆயிரத்து 999 ஷோரூம் தொடக்க விலையில் வாங்க முடியும்.

மேலும் பயனர்கள் தங்களுடைய பழைய பெட்ரோல் ஸ்கூட்டரை கொடுத்து புதியது வாங்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பழைய ஸ்கூட்டர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஓலா S1 ப்ரோ அல்லது S1 ஏர் மாடல்களை வாங்கும் பொழுது 7 நாட்களில் டெலிவரி செய்யப்படுகிறது. ஓலா S1 எக்ஸ்பிரஸ் மாடலுக்கு ஐந்தாயிரம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் அனைத்தும் இந்த மாத இறுதிவரை மட்டுமே வழங்கப்படும்.