சட்டப்பேரவையில் அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது, பொது விநியோகத் திட்டத்திற்கு கணினிகள் வழங்கப்படும். பொது விநியோகத் திட்டம் தொடர்பான அரசு திட்டங்களைச் சிறப்பாக விரைந்து செயல்படுத்திட மின் அலுவலக செயலாக்கத்தினை (e-Office) 100 சதவிகிதம் நடைமுறைப்படுத்திட போதிய கணினிகள், அச்சுப்பொறிகள் மற்றும் மின் உருவாக்கக் கருவிகள் வழங்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்புக் கிடங்கு ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். நுகர்வோர் தங்களது குறைகளை வலைதளத்தில் எளிதில் பதிவு செய்ய தனித்துவம் வாய்ந்த நுகர்வோர் குறைதீர் வலைத்தளம் மற்றும் கைபேசி செயலி உருவாக்கப்படும்.

தமிழக முழுவதும் இளம் நுகர்வோரிடையே நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புத்தாக்க பயிற்சி வழங்கப்படும். முதியவர்கள் ரேஷன் கடைக்கு வராமல் குடும்ப உறுப்பினர்கள் மூலம் பொருட்களை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

சிறந்த ரேஷன் கடை பணியாளர்களுக்கு ரொக்க தொகை, பரிசுகள் வழங்கப்படுகிறது. மாவட்டம், மாநில அளவில் தலா 6 பேருக்கு விருது வழங்கப்படுகிறது.