
இந்தியாவில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் இரட்டை பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க தாயின் வயது 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
40 வயதிற்குள் தாய் குடும்ப கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாயாக இருக்க வேண்டும். ஆண் வாரிசு இல்லை என்ற சான்று, இரண்டு பெண் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும். இ-சேவை மையத்தில் விண்ணப்பித்த பிறகு அதன் நகலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சமூக நல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு 50,000 ரூபாய் கிடைக்கும்.