இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகிறது. சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

இந்த நிலையில் திருத்தப்பட்ட ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களின் படி 1999 ரூபாய் வருடாந்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1999ஐ 365 ஆல் வகுத்தால் நாளொன்றுக்கு 5.48 ரூபாய் ஆகும். ஆறு ரூபாய்க்கு குறைவான கட்டணத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி, மாதத்திற்கு 2ஜிபி டேட்டா விதம் 24 ஜிபி, வரம்பட்டு அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒரு மாதத்திற்கு சுமார் 167 ரூபாய் மட்டுமே செலுத்தும் கணக்கு ஆகும்.