
கேரள மாநிலம் வைக்கம் என்னும் பகுதியில் தந்தை பெரியார் நினைவகம் அமைந்துள்ளது. இதனை சீரமைக்கும் விதமாக தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ 8.14 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணி துறையின் மூலமாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சில அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.
அதன் பிறகு அமைச்சர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, 1924 ஆம் ஆண்டு வைக்கத்தில் ஒரு போராட்டம் நடந்தது . அதாவது வைக்கத்தில் அமைந்துள்ள கோயிலை சுற்றி தெருக்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடந்து செல்வதற்கு இருந்த தடைகளை தகர்த்துவதற்காக நடைபெற்ற நிலையில் அதை தந்தை பெரியார் தலைமையேற்று நடத்தினார்.
இதற்காக 1985 ஆம் ஆண்டு தமிழக அரசு கேரள அரசு வழங்கிய நிலத்தில் தந்தை பெரியாருக்கு ஒரு நினைவகம் கட்டினர் எனக் கூறினார். இதைத்தொடர்ந்து அந்த நினைவகத்தில் நூலகம் ,அவர் பயன்படுத்திய பொருள்கள், புகைப்படங்கள், வாழ்க்கை வரலாறு இடம்பெற்று இருந்தன. இன்றைய நாளில் அந்த நினைவகம் மிகவும் பழமையான நிலையில் காணப்பட்டதால் தமிழக அரசு அதை புனரமைக்கும் விதமாக 8.14 கோடி வழங்க உத்தர விட்ட நிலையில் புனரமைப்பு பணி நடந்து வருகிறது என்று கூறினார்.