
அமெரிக்க நாட்டில் வலேரி வால்கோர்ட் என்ற பெண் வசித்து வருகிறார். இவர் உலகின் முன்னணி நிறுவனங்களாக google மற்றும் அமேசான் போன்றவைகளில் பணியாற்றியவர். அப்போது அவர் ரூ.83 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார். ஆனால் அவருக்கு அந்த வேலையில் திருப்தி கிடைக்காததால் தன் மனதுக்கு பிடித்த வேலையை செய்ய முடிவு செய்துள்ளார். இதனால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பிரான்சுக்கு சென்றார்.
அங்குள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் உணவகத்தில் உதவியாளராக பணிக்கு சேர்ந்தார். அங்கு அவருக்கு ரூ.25 லட்சம் சம்பளம் கிடைக்கிறது. அதன்பிறகு ஒரு வருடத்திற்கு சம்பளத்துடன் 5 வார விடுமுறையும் வழங்கப்படுகிறது. மேலும் வலேரி குறைந்த சம்பளம் வாங்குவதால் நான் கவலை அடையவில்லை எனவும் தற்போது இந்நாட்டின் சூழல் மற்றும் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.