
தமிழகத்தில் கனமழை காரணமாக, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (அக். 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ராணிப்பேட்டை, ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (16.10.24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர்ச்சியான மழை நிலைமை மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கலாம் என்பதால், அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளாக இந்த முடிவுகளை எடுத்து வருகிறது.