
பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளரான பிரதீப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற ஒரு காரணத்தால் பிக் பாஸ் வீட்டில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியற்றப்பட்டார். இவர் வெளியேறியது சக போட்டியாளர்களுக்கு சந்தோசமானதாக இருக்கலாம். ஆனால் ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கவின், பிரியங்கா, சினேகன் உள்ளிட்ட பலரும் அவருடைய வெளியேற்றத்தை மனவருத்தத்துடன் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வெளியேறிய அவர் தன்னுடைய டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் பிக் பாஸ்-7 கோப்பைகள் என ஒரு புகைப்படத்தை எடுத்து ஏதோ என்னால் முடிந்தது சிம்பிள் ஸ்டார் என்று தெரிவித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் தனக்கு கிடைத்த ஸ்டார், லைக்ஸ், டிஸ்லைக் பட்டன்களை அவர் புகைப்படம் அவருக்கு பலரும் ஆறுதலை தெரிவித்து கொள்கிறார்கள்.
My BB7 Trophies 🔥#EdhoEnnalaMudinjathu #SimpleStar pic.twitter.com/DjINKNBl2R
— Pradeep Antony (@TheDhaadiBoy) November 4, 2023