
இந்தியாவில் ஏழை குடும்பங்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைந்து வரும் நிலையில் அடுத்த மாதத்துடன் இந்த திட்டம் முடிவடைய இருந்த நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரேஷன் அட்டைதாரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.