
தமிழ்நாட்டில் புதிதாக ரேஷன் அட்டை பெறுவதற்கு பலர் விண்ணப்பித்துள்ள நிலையில் இதுவரை ரேஷன் கார்டுகள் கிடைக்கவில்லை. அதாவது ஏராளமானோர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளதால் தாமதமாவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலம் வாடிக்கையாளர்கள் தடை இன்றி பொருட்களை பெற வேண்டும் என்றால் ஆதார் ஆட்டையை இணைப்பது கட்டாயம் என அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக PDS கடையிலிருந்து ரேஷன் பொருட்கள் பெறுபவர்கள் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற வேண்டுமென்றால் கட்டாயமாக ஆதார் அட்டையை இணைக்க வேண்டும். இவர்கள் மட்டுமின்றி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் ஆதார் கார்டை இணைப்பது கட்டாயம்.
இல்லையெனில் ரேஷன் பொருட்கள் உட்பட அரசு எந்தவித நலத்திட்டங்களின் மூலமாகவும் பயன்பெற முடியாது. இந்நிலையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் ஆதார் அட்டையை இணைக்கும் செயல்முறையை அரசு தொடங்கியுள்ள நிலையில் இதனை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு TNPDS என்ற அதிகாரப்பூர்வ ஆன்லைன் பக்கத்திலும் ரேஷன் ஆதார் அட்டையை இணைத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி ஆகும்.