
நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்யாவசியமான பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ரேஷன் கார்டுகள் ஒரு முக்கிய ஆவணம். இந்நிலையில் ரேஷன் கார்டுகளில் இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இகேஒய்சி சரிபார்ப்பை முடிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி டிசம்பர் 1ஆம் தேதி வரை இகேஒய்சி சரிபார்ப்பை முடிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது அதனை எப்படி சரி பார்ப்பது என்பது குறித்து பார்ப்போம்.
நீங்கள் ஆன்லைன் சென்டரில் சென்றும் செயல்பாட்டை முடித்துக் கொள்ளலாம் அல்லது வீட்டில் இருந்து முடித்துக் கொள்ளலாம். அதற்கு முதலில் உங்கள் மாநிலத்தின் உணவுத்துறை அல்லது ரேஷன் கார்டு சேவையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குள் செல்ல வேண்டும். அதில் இகேஒய்சி இணைப்பை காணலாம். அதில் ரேஷன் கார்டில் உள்ள பதிவு எண் மற்றும் மொபைல் நம்பரை பதிவிட்டு உள்ளே நுழைய வேண்டும். பின்னர் நீங்கள் பதிவு செய்திருந்த மொபைல் நம்பருக்கு ஓடிபி நம்பர் வரும் நிலையில் அதனை பதிவிட வேண்டும்.
பின்னர் ஆதார் நம்பரை பதிவிட்டு ரேஷன் கார்டுடன் இணைத்துவிட்டு ஆதார் மற்றும் ரேஷன் இரண்டிலும் உங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரியான முறையில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அது ஆதாரருடன் இணைந்த பிறகு கைரேகை அல்லது ஓடிபி விபரங்களை சரிபார்த்துக் கொள்ளணும். அதன்பின் இகேஒய்சி சரிபார்ப்பு முடிந்து விடும். ஒருவேளை இது செய்ய முடியாவிடில் அருகில் உள்ள பொது சேவை மையம் அல்லது ரேஷன் கடைகளுக்கும் சென்று இந்த செயல்பாட்டினை முடிக்கலாம். மேலும் இதனை செய்யவிடில் ரேஷன் கார்டுகள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதோடு அது ரத்தாகவும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது.