தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி பருப்பு உள்ளிட்ட அத்யாவசியமான பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கிறது. அதன்பிறகு ரேஷன் கடைகளில் மோசடிகளை தவிர்ப்பதற்காக இகேஒய்சி அப்டேட் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதியோடு முடிவடைந்தது.

ஆனால் ஏராளமானோர் இகேஒய்சி அப்டேட்டை முடிக்காததால் அரசு மீண்டும் கால அவகாசம் கொடுத்து ஜூன் 31 2025 வரை நீடித்துள்ளது. இந்த நாளுக்குள் கண்டிப்பாக இகேஒய்சி அப்டேட்டை முடிக்க வேண்டும். அதன்பிறகு ரேஷன் அட்டையில் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களும் நேரில் ரேஷன் கடைகளுக்கு சென்று தங்களுடைய கைரேகையை பதிவு செய்வது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் கடைசி வாய்ப்பு என்று கூறப்படுவதால் கண்டிப்பாக ஜூன் 31ஆம் தேதிக்குள் ரேஷன் அட்டையில் பெயர் உள்ள அனைவரும் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களுடைய பெயர் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்படலாம். எனவே உடனடியாக இகேஒய்சி அப்டேட்டை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று அல்லது ஆன்லைன் மூலமாகவோ இந்த செயல்முறையை முடிக்கலாம்.