
மத்திய, மாநில அரசுகள் நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல சிறப்பு சலுகைகளையும் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. குறிப்பிட்ட ரேஷன் அட்டை கொண்டவர்களுக்கு அதிகமான பலன் கிடைக்கிறது. அந்த வகையில் அந்தியோதயா ரேஷன் அட்டை கொண்ட மக்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைகள் அனைத்தும் பயனுள்ள விதமாக உள்ளது. அதன்படி உத்தர பிரதேசத்தில் உள்ள அந்தியோதயா ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கும் ஒரு கிலோ சர்க்கரை ரூபாய் 18 வீதம் 3 கிலோ சர்க்கரை, 21 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த திட்டமானது நவம்பர் இறுதி வரை செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.