திருப்பூர் மாநகராட்சி 54 வது வார்டு, வஞ்சி நகர் என்னும் பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் குடிசை மாற்று வாரியம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டது. இதனால் வஞ்சி நகர் பகுதிக்கு செல்ல அப்பகுதி வழியாக 40 அடி வழித்தடம் விடப்பட்டது. இந்த பாதையை குடிசை மாற்று வாரியம் கம்பி வேலி போட்டு அடைத்து விட்டதால் வஞ்சி நகர்  மக்கள் பல கிலோமீட்டர் சுற்றி தங்களது பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனவே வஞ்சி நகர் மக்கள் தங்களுக்கு விடப்பட்ட வழித்தடம் வேண்டும் என வீட்டு வசதி வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த 300-க்கும் அதிகமான மக்கள் திருப்பூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார்கார்டு மற்றும் அரசு ஆவணங்களையும் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.