தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் பாமயிலின் எண்ணெய்க்கு பதிலாக  தேங்காய் எண்ணெயாக வழங்க திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் முதல்கட்டமாக இது செயல்படுத்தப்படும்.

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. இதனால் தேங்காய் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அரசு இதுகுறித்த கருத்து கேட்டு வருகிறது. அதிகமானோர் தேங்காய் எண்ணெய் வழங்க ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் விரைவில் தேங்காய் அல்லது கடலை எண்ணெய் ரேஷன் கடைகளில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.