
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் அட்டை வைத்துள்ள மக்கள் அனைவரும் இதில் பயன் அடைந்து வருகிறார்கள். அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் நிலையில் பல ரேஷன் கடைகளில் ரேஷன் அரிசி தரமாக வழங்கப்படுவதில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்டவை தரம் குறைந்ததாகவோ அல்லது எடை குறைவாகவோ இருந்தால் அது குறித்து பொது விநியோகத் துறைக்கு புகார் தெரிவித்து தீர்வு காண முடியும். அதற்கான பொது விநியோக துறையின் தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி இதோ,
தொலைபேசி எண்கள் – 1967 அல்லது 1800-425-5901
மின்னஞ்சல் முகவரி- [email protected]