
ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் ரேஷன் கடைகளில் மே மாதத்திற்கான பாமாயில் துவரம் பருப்பை ஜூன் முதல் வாரத்தில் மக்கள் பெற்று கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக பாமாயில் மற்றும் துவரம் பருப்புக்கான ஒப்பந்த புள்ளிகளை முடிவு செய்து கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.