
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு 5 ஆயிரத்து 578 விற்பனையாளர், 925 இடையாளர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வானவர் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதற்கான அறிவிப்பாணை செல்லத்தக்க காலம் ஏப்ரல் உடன் முடிந்து விட்டது. இந்நிலையில் ரேஷன் ஊழியர்கள் தேர்வுக்கான அறிவிப்பாணை செல்லத்தக்க காலத்தை ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.