மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவானது. இந்த படத்தில் திரிஷா, ரெஜினா, அர்ஜுன், நிகில் நாயர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விடாமுயற்சி திரைப்படத்திற்கு அனிருத் திசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு பணிகளை செய்துள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆக உள்ளது.

படத்தின் டீசர் ரிலீஸ் ஆகி மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் மதியம் ஒரு மணிக்கு ரிலீஸ் ஆகி அமோக வரவேற்பை பெற்றது. சற்று முன் லிரிகல் வீடியோ ரிலீஸ் ஆகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் அஜித் த்ரிஷா காம்போ  பட்டையை கிளப்புவதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.