
சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இந்திய அணி அதில் வெற்றி பெற்றது. இந்த போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற நிலையில் இந்தியா மோதிய போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்றது. இறுதிப்போட்டி துபாயில் நடைபெற்ற போது நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியை காண்பதற்காக இந்திய அணி நட்சத்திர வீரர் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலியின் சகோதரர் விகாஷ் ஷர்மா ஆகியோர் சென்றனர்.
அப்போது விகாஸ் ஷர்மா அணிந்திருந்த வாட்ச் சமூக வலைதளத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது சாம்பியன்ஸ்டிராபி தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற இறுதி போட்டியை காண அவர் சென்றிருந்தார். அப்போது அவர் தன் கையில் Patek Philippe Nautilus என்ற விலை உயர்ந்த வாட்ச் அணிந்திருந்தார். இதன் விலை ரூ. 2.13 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram