
கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து ப் போனால் வாழ்க்கை நன்றாக அமையும். ஆனால் தகராறு ஏற்படுவதால் ஒரு சில அற்ப காரணங்களுக்காக விவாகரத்து பெறுகின்றனர். அந்த வகையில் 25 ஆண்டுகளாக ஒரு தம்பதியினர் சேர்ந்து வாழ்ந்தனர். ஆனால் அதிகமான கேள்விகள் கேட்பதை காரணமாக கூறி ஒரு பெண் தனது கணவரை விவாகரத்து செய்துள்ளார்.
அவரது கணவர் வழக்கமாக பயன்படுத்தும் சோப்புக்கு பதில் வேறு சோப்பு உபயோகப்படுத்தினால் கூட ஏன் மாற்றினாய்? இதை தேர்ந்தெடுக்க என்ன காரணம்? இத்தனை சோப்புகள் இருக்கும் போது இதை ஏன் தேர்ந்தெடுத்தாய்? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ளார். அதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாததால் தன் கணவரை விவாகரத்து செய்வதாக ஒரு பெண் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு இப்போது பேசுபொருளாகியுள்ளது.