ஐபிஎல்லின் 13 ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்க்ஸ் அணியானது எட்டு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. முன்னதாக பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரியன்ஸ் ஆர்யா  ஆடியபோது திக்வேஷ் ரதி பந்துவீச்சு மூலம் விக்கெட்டை கைப்பற்றினர். இந்த விக்கெட்டை கொண்டாடும் விதமாக பிரியன்ஸ் ஆர்யா பக்கத்தில் சென்று தன்னுடைய கைகளில் எழுதுவது போன்று “நோட்புக்” கொண்டாட்டத்தில்  திக்வேஷ் ரதி ஈடுபட்டார்.

இருந்தாலும் இதனை கண்டு கொள்ளாமல் பிரியன்ஸ் ஆர்யா சென்று விட்டார். இது ஒட்டுமொத்த பஞ்சாப் அணி ரசிகர்களையும் கடுப்பில் ஆழ்த்தியது. முதலில் பொறுமையாக விளையாடிய பஞ்சாப் அணி அந்த சம்பவத்திற்கு பிறகு அதிரடி காட்டியது . திக்வேஷ் நல்ல திறமை வாய்ந்த வீரராக இருந்தாலும் அவருடைய இந்த கொண்டாட்டமானது  முகம் சுளிக்கும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தார்கள். இந்நிலையில் இதற்காக ஐ.பி.எல். நிர்வாகம், திக்வேஷ் ரதி ஐ.பி.எல். விதிமுறைகளை மீறியதாக கூறி அவருக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதித்து  உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.