
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்ணீர் என்று நினைத்து மதுவை குடித்த சரிதா என்ற இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தாகம் எடுத்ததால் பாட்டியின் அறையில் இருந்த மதுவை எடுத்து குடித்துள்ளார். பிறகு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிறிது நேரத்தில் சுய நினைவை இழந்து தரையில் சரிந்து விழுந்தது.
இதனைக் கண்டு பதறிப் போன பெற்றோர் உடனே குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனையில் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நீருக்கு பதிலாக மதுவை குடித்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.