
ஹாங்காங்கில் உள்ள டிஸ்னி லேண்டில் ஒரு குப்பை தொட்டியின் வீடியோ தற்போது வைரலாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிஷன்கள் பலரும் இப்படி ஒரு குப்பை தொட்டி இருந்தால் எப்படி குப்பையை போட மனசு வரும் என்கிறார்கள். அதாவது குப்பைத்தொட்டி என்றால் பொதுவாக சாலை ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த குப்பை தொட்டி வித்தியாசமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டு குப்பைகளை போடுங்கள் என்று கேட்கிறது.
நான் குப்பைகளை சாப்பிட விரும்புகிறேன். எனவே தயவு செய்து குப்பைகளை என்னிடம் போடுங்கள் என்று அது கெஞ்சுவது போன்று இருக்கிறது. அதாவது மக்கள் தங்களுடைய குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதுபோன்ற வித்தியாசமான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இந்த குப்பைத்தொட்டையில் குப்பைகளை போடும்போது ஆகா என்ன சுவையாக இருக்கிறது என்று அது கூறுகிறது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram