சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் விஜயின் லியோ திரைப்படம் திரையிடப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படத்திற்கு மொத்தம் ஐந்து காட்சிகளை திரையிட தமிழக அரசு அனுமதித்துள்ளது.

இந்த நிலையில் நாளை காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்குகிறது. இதனிடையே சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்க வளாகத்தில் இங்கு லியோ திரைப்படம் திரையிடப்படாது என்று எழுதப்பட்ட போர்டு வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமீபத்தில் லியோ ட்ரெய்லர் ரோகினி திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட்டபோது விஜய் ரசிகர்கள் தியேட்டர் இருக்கைகளை சேதப்படுத்தி சூறையாடியது குறிப்பிடத்தக்கது.