
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்தை 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டாக்டர் ஷாமா முகமது ரோகித் சர்மாவை அதிக உடல் எடை கொண்டவர் என்று விமர்சித்துள்ளார். அதோடு ஒரு விளையாட்டு வீரராக நிச்சயமாக ரோகித் தன்னுடைய உடல் எடையை குறைக்க வேண்டும் எனவும் இந்தியா இதுவரை கண்டிராத மிகவும் ஈர்க்க முடியாத கேப்டன் என்றும் பதிவிட்டுள்ளார்.

இதற்கு தற்போது பாஜக கட்சியின் தலைவர் ராதிகா கெரா பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, காங்கிரஸ் கட்சிக்கு விளையாட்டு வீரர்களை பிடிக்காது. அவர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களை அவமதிப்பதை பல தசாப்தங்களாக கொண்டுள்ளனர். அவர்கள் பல வீரர்களை அவமானப்படுத்திய நிலையில் தற்போது கிரிக்கெட் ஜாம்பவானையே கேலி செய்ய துணிந்துவிட்டனர். உறவினர்களுக்கு மட்டுமே சலுகை காட்டும் கட்சி தன்னைத்தானே உருவாக்கிக் கொண்ட ஒரு சாம்பியனுக்கு உபதேசம் செய்வதா.? இந்தியாவை உலகக்கோப்பை வெற்றிக்கு அழைத்துச் சென்றவர் ரோகித் சர்மா. மேலும் ராகுல் காந்தியால் தன்னுடைய சொந்த காட்சியை கூட குழப்பத்தில் ஆழ்த்தாமல் வழிநடத்த முடியாது என்று கூறியுள்ளார்.