
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு ஒருவர் மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது அவர் அங்கு இருந்த கழிவறையின் கதவில் இந்தியன் -2 பட வாசகத்தை எழுதியுள்ளார். அதில் ஏழை, எளிய பாமர மக்களின் குறைகளை லஞ்சம் வாங்காமல் பூர்த்தி செய்யுங்கள், அவர்களின் மனுவை வாங்கி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுங்கள் என்று எழுதி எழுதியுள்ளார். வாசகத்தின் இறுதியில் இந்தியன் -2 என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து கழிவறைக்கு சென்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கதவில் உள்ள வாசகத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் குறை கேட்பு கூட்டத்திற்கு வந்த நிலையில் அதில் ஒருவர் தான் இந்த வாசகத்தை எழுதியுள்ளார் என தெரிய வந்தது. இந்த சம்பவம் அலுவலர்களுக்கு அச்சத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது என பேசப்படுகிறது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் இதனை எழுதியவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.