
தஞ்சையில் லஞ்ச ஒழிப்புத் துறையினரை பார்த்ததும் அரசு அதிகாரிகள் பண கட்டுகளை தூக்கி எறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் மல்லிகா நகர் பகுதியைச் சேர்ந்த பிலிப் ராஜ் என்பவர் வீட்டு வரி ரசீது பெற ஊராட்சி அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது ஊராட்சி செயலாளர் அந்தோணி 2000 ரூபாயை லஞ்சமாக கேட்டுள்ளார். இது குறித்து பிலிப் ராஜ் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார்.
இதனை அடுத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தினரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டு வாங்கியபோது அந்தோணி ராஜை லஞ்ச ஒழிப்பு துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். இதனிடையே லஞ்ச ஒழிப்பு துறையினர் வருவதை அறிந்த அதிகாரிகள் கணக்கில் வராத பணத்தை அங்கே இருந்து தூக்கி எறிந்தனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.