லடாக்கின் சுஷுலில் நடைபெற்ற இந்தியா மற்றும் சீனா ராணுவ கார்ப்ஸ் கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. இந்தியா – சீனா ராணுவ கமாண்டர்கள் அளவிலான 19 ஆவது சுற்று பேச்சு வார்த்தை கிழக்கு லடாக்கில் நடந்தது. இருநாட்டு எல்லையில் குறிப்பிட்ட பகுதிகளில் படைகளை விளக்கிக் கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

2020இல் கிழக்கு லடா கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையினருடனான மோதலில் 20 இந்திய வீரர்கள் மரணமடைந்தனர். சீன படையினருடன் ஆன மோதலையடுத்து இருநாட்டு எல்லைகளிலும் படைகள் குவிக்கப்பட்டன.