தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செப்டம்பர் மாதம் லண்டன் செல்ல திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இந்த பயணம் என்று சொல்லப்படும் நிலையில், 5 மாதம் அவர் இந்தியாவில் இருக்க மாட்டார் என்றும் மீண்டும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் இறுதியில் தான் சென்னை திரும்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஐந்து மாதங்களில் தமிழக பாஜக தலைமை இல்லாமல் இருக்குமா? அல்லது வேறு ஒரு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா ?என்ற கேள்வி எழுந்துள்ளது. தலைமை இல்லாமல் இருக்கும் அந்த ஐந்து மாதங்களும் பாஜகவை வழிநடத்துவதற்கு உயர்மட்ட ஒருங்கிணைப்பு குழு ஒன்று உருவாக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.