
சென்னையில் 22 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தன் கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரூபன் (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் 2 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவரும் கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். பின்னர் மது போதையில் இருவரும் படுத்து தூங்கிய நிலையில் மறுநாள் காலை ரூபன் மட்டும் அறையை விட்டு ஓடிவிட்டார்.
அதன்பின் ஊழியர்கள் அங்கு வந்து பார்த்தபோது பெண் பிணமாக கிடந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய ரூபனை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது இருவரும் மது போதையில் தூங்கிய நிலையில் நேற்று காலை அந்த பெண்ணின் செல்போனை அவர் பார்த்தார். அப்போது அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக ரூபன் அவரிடம் கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில் அந்த பெண்ணை அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.