லாவோஸ் நாட்டைச் சேர்ந்த செங் சைபன் (46) என்பவர் அமெரிக்காவில் குடியேறினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகின்றார். சமீபத்தில் பவர் பால் லாட்டரி விளையாட்டில் டிக்கெட் வாங்கினார். சமீபத்தில் டிராவில் அவர் 1.3 பில்லியன் டாலர்களை வென்றுள்ளார். இந்திய மதிப்பின்படி 100 கோடிக்கும் மேலான மதிப்பாகும். இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர், இந்த பணத்தை சிறந்த புற்றுநோய் சிகிச்சை பெற பயன்படுத்த இருப்பதாக கூறியுள்ளார்.