
விருத்தாச்சலம் அருகே பரவலூர் – கோமங்கலம் இடையை பைக்கில் இரண்டு இளைஞர்கள் சென்ற நிலையில் லாரி மோதியதில் பைக் விபத்துக்குள்ளாகி இளைஞர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இந்த விபத்து வேடிக்கை பார்ப்பதற்காக கூட்டம் குவிந்துள்ளது. அப்போது திடீரென்று வேகமாக வந்த கார் மோதியதில் கூட்டத்தின் மீது பாய்ந்து அதில் 15 பேர் காயமடைந்து உள்ளனர்.
அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். கார் ஓட்டுனரை பிடித்து அங்கிருந்தவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.