கேரளா திருவனந்தபுரம் அருகே ஒரு கிராமத்தில் ரவீந்திர நாயர் என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருக்கிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ரவீந்திரன் நாயர் முதுகு வலி காரணமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். அப்போது  மருத்துவரை சந்திக்கும்போது சில மருத்துவ ஆவணங்களை அவர் வீட்டில் வைத்து விட்டு வந்தது தெரிய வந்தது. எனவே அதை எடுப்பதற்காக அவர் வீடு திரும்பினார். இதைத்தொடர்ந்து மருத்துவ ஆவணங்களை எடுத்து கொண்டு மருத்துவமனைக்கு திரும்பி வந்த அவர் முதல் தளத்திலிருந்து லிப்டில் இரண்டாவது தளத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென ஒரு சத்தம் கேட்டது. லிப்ட் குலுங்கி அதே இடத்தில் அப்படியே நின்றது.

இதனால் அவரது செல்போன் கீழே விழுந்து உடைந்து விட்டது. எனவே அவரால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதனால் அவர் அலாரம்பட்டனை அழுத்தினார். ஆனால் எந்தவித பதிலும் அளிக்கவில்லை. அதன்பின் மருத்துவமனையில் உள்ளவர்கள் லிப்டை பயன்படுத்தும் போது லிப்ட் பழுதடைந்தது தெரிந்தது. எனவே அதை யாரும் உபயோகிக்கவில்லை. இந்நிலையில் ரவீந்திரன் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு சென்றவரை காணவில்லை எனகாவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மருத்துவமனைக்கு சென்ற காவல்துறையினர் லிப்ட் ஐ சோதனை செய்தனர். லிப்ட் பழுது பார்ப்பவரை அழைத்து வந்து லிப்டை திறந்து பார்த்தபோது உள்ளே ரவீந்திரன் மிகவும் மோசமான நிலையில் மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை விளக்கம் தருமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.