லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் லியோ. இதில் விஜய்க்கு ஜோடியாக  த்ரிஷா நடிக்கிறார். மேலேயும் பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இந்நிலையில், ‘ லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா 30-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பங்கேற்க விஜய் ரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல், சொந்த வாகனங்களில் விழாவில் ரசிகர்கள் பங்கேற்க வேண்டும். ரசிகர்கள் உரிய அனுமதி பெற்று பேனர் வைக்கலாம் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.