லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ திரைப்ப்டத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் 19-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், லியோ படத்தின் தெலுங்கு பதிப்பை அக்டோபர் 20ம் தேதி வரை வெளியிட ஹைதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், தயாரிப்பாளர் விநியோகஸ்தர் நாக வம்சி, லியோ தலைப்பு தொடர்பான சிக்கலை சம்பந்தப்பட்ட நபருடன் பேசி யாருக்கும் நஷ்டம் ஏற்படாமல் தீர்ப்போம். தெலுங்குப் பதிப்பு அக்டோபர் 19 உறுதியாக வெளியாகும் என தெரிவித்துள்ளார்.