
கேரளா மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இளைஞர் ஒருவருடன் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்தப் பெண் இளைஞர் மீது குடும்ப வன்முறை என்ற பெயரில் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு கேரளா உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து கேரள உயர்நீதிமன்றம், “லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப் என்பது திருமணம் அல்ல” என்றும் தன்னுடன் இருக்கும் துணையை கணவர் என்று அழைக்க முடியாது, சட்டப்படி திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அவரை கணவர் என்று அழைக்கலாம் எனவும் கருத்து தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து தன்னுடன் இருக்கும் துணையை பங்குதாரர் என்று மட்டுமே அழைக்க முடியும். அவர்கள் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டால் அது குடும்ப வன்முறை வட்டத்திற்குள் வராது என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதனால் அந்த பெண் இளைஞர் மீது கொடுத்த புகார் தவறானது என்றம் கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்தது.மேலும் அந்த இளம் பெண் கொடுத்த புகார் ரத்து செய்யப்பட்டது.