தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.   பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்க ளுக்க செல்ல விரும்புவார்கள். அதனால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனை தவிர்ப்பதற்காகவே அரசு சார்பாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுடைய ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த கூட்ட நெரிசலை தவிர்க்க கூடுதலாக பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. ஆயுத பூஜையை வருவதால், அரசு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை விடுப்பு எடுக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது. மீறி விடுப்பு எடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.