
உத்திரபிரதேசம் மாநிலத்தில் பிக்பூர் என்ற பகுதி உள்ளது. இங்கு சர்க்கில் அதிகாரியாக டிஎஸ்பி கிருபா சங்கர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் குடும்ப காரணங்களுக்காக விடுமுறை எடுத்திருந்தார். ஆனால் அப்போது அவர் வீட்டிற்கு செல்லாமல் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். அதோடு தன்னுடைய போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார். அதாவது கான்பூரில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலில் பெண் கான்ஸ்டபிள் ஒருவருடன் டிஎஸ்பி உல்லாசமாக இருந்துள்ளார்.
இதற்கிடையில் தன்னுடைய கணவரின் செல்போன் நம்பர் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததால் பதறிப் போன அவருடைய மனைவி தன்னுடைய கணவரை காணவில்லை என உன்னாவ் நகர எஸ்பியிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கிருபா சங்கரை தேடினர். அப்போது அவர் ஹோட்டலில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று காவல்துறையினர் பார்த்தபோது அவர் பெண் காவலருடன் கையும் களவுமாக பிடிப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது அவர் டிஎஸ்பி பதவியில் இருந்து கான்ஸ்டபிள் ஆக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.